கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் மீனவர்கள்- கடலோர மக்களுக்கு எச்சரிக்கை


கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் மீனவர்கள்- கடலோர மக்களுக்கு  எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 April 2018 11:51 AM IST (Updated: 20 April 2018 11:51 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும், மீனவர்கள் கடலோர மக்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை

 வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் 21, 22 ஆம் தேதிகளில் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு கடல் அலையின் சீற்றம் இருக்கும்.

கடல் சீற்றம் அதிகமாக இருப்பது பற்றி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயரும் என இன்சாட் அமைப்பு தெரிவித்துள்ளது". "கடலோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். கடலுக்குள் படகுகளில் செல்ல வேண்டாம்". 

"18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாளை காலை  8.30  மணி முதல் ஞாயிறு இரவு 11 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும். 


Next Story