நிர்மலா தேவி விவகாரம்: பொதுமக்களில் ஒருவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார் -விசாரணை அதிகாரி சந்தானம்


நிர்மலா தேவி விவகாரம்: பொதுமக்களில் ஒருவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார் -விசாரணை அதிகாரி சந்தானம்
x
தினத்தந்தி 20 April 2018 11:02 AM GMT (Updated: 20 April 2018 11:02 AM GMT)

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பொதுமக்களில் ஒருவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார் என விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்து உள்ளார். #Nirmaladevi

மதுரை, 

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்  நிர்மலாதேவியை 10 நாட்கள் ஒப்படைக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.

இதனிடையே நிர்மலா தேவி விவகாரம்  சி.பி. சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2 விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணையை தொடங்கி உள்ளன.

ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் விசாரணையை இன்று தொடங்கினார்

விசாரணை அதிகாரி சந்தானம் கூறியதாவது;

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் காலை முதல் 9 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது; இன்னும்  12 பேர் வரை விசாரணை செய்ய வேண்டிய உள்ளது.
இன்று விசாரணை முடியாவிட்டால், மேலும் ஒருநாள் கல்லூரியில் விசாரணை நடக்கும் .

பேராசிரியை நிர்மலாதேவியை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தாலும், அவரிடம் விசாரணை மேற்கொள்ள எனக்கு எந்த தடையுமில்லை  நாளை அல்லது வரும் 25ம் தேதி நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த உள்ளேன். பொதுமக்களில் ஒருவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். மேலும் புகார் கொடுப்பவர்கள் தாராளமாக யார் வேண்டுமானாலும் வந்து புகார் கொடுக்கலாம்

பேராசிரியை குறித்து புகாரளித்த 4 மாணவிகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம்; பேராசிரியை விவகாரத்தில் தகவல் அளிக்க முன்வந்தால் விசாரணை நடத்த தயாராக உள்ளோம்.  என கூறி உள்ளார்.

Next Story