பயங்கர கடல் சீற்றம் கடற்கரை கிராம மக்கள் அச்சம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
குமரி மாவட்டத்தில் பயங்கர கடல் சீற்றம் காரணமாக கடற்கரை கிராமங்களில் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பும் கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்தமிழக கடலோர பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.கடற்கரை பகுதிகளுக்கு பொழுதுபோக்கிற்காகவும், வேடிக்கை பார்க்கவும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
நேற்று இரவு முதல் குமரி மாவட்ட கடல் பகுதிகள் சீற்றமாக காணப்பட்டது. அலைகளும் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டின. வழக்கமாக அலைகள் சீரான இடைவெளி விட்டு குறிப்பிட்ட உயரத்தில் வீசும். ஆனால் நேற்றிரவு அலை களின் வேகமும், அவை அதிக உயரத்துடன் எழுந்தது
கடலில் ஏற்படும் இயற்கை மாற்றத்தால் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்ற அறிவிப்பை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தம்; கரையோர மீன்பிடி தொழிலாளர்கள் சுமார் 15000 க்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒலிபெருக்கி மூலம் கடலோர காவல் குழும போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகிறது
ஆழ்கடலுக்கு சென்ற 500 விசைப்படகுகள் கரை திரும்பவும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story