தொண்டர்கள், பொதுமக்களுடன் ‘யூ–டியூப்’ நேரலையில் கமல்ஹாசன் இன்று பேசுகிறார்


தொண்டர்கள், பொதுமக்களுடன் ‘யூ–டியூப்’ நேரலையில் கமல்ஹாசன் இன்று பேசுகிறார்
x
தினத்தந்தி 22 April 2018 12:24 AM IST (Updated: 22 April 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘யூ–டியூப்’ நேரலையில் உரையாட உள்ளார். #KamalHassan

சென்னை, 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘யூ–டியூப்’ நேரலையில் உரையாட உள்ளார். இதுதொடர்பாக கட்சி உறுப்பினர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கிராமியத்தை வளர்த்து, மக்கள் நலனை முழுமையாக மேம்படுத்துவது எளிதான செயல் அல்ல. உங்களை போன்ற ஆர்வமிக்க கள வீரர்களின் உதவி இருந்தால் இது சாத்தியமான சவாலே. எத்தனையோ பணிகள் இருந்தாலும் நம் கிராமியத்தை வளர்த்தெடுக்கும் முக்கிய கடமை நமக்கு இருக்கிறது.

இந்த கடமையை ஆற்றுவதற்கு உங்கள் ஆற்றலையும், நேரத்தையும் நாடுகிறேன். உங்கள் அனைவரிடத்திலும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ‘யூ–டியூப்’ நேரலையின் மூலம் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை பேச விரும்புகிறேன். www.maiam.com/gramiyam/ இந்த இணைப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு என்னுடன் இணையுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story