கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தொடர்வது இரு மாநிலங்களுக்கும் தீங்கு பொன்.ராதாகிருஷ்ணன்


கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தொடர்வது இரு மாநிலங்களுக்கும் தீங்கு பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 23 April 2018 1:00 AM IST (Updated: 23 April 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தொடர்வது இரு மாநிலங்களுக்கும் தீங்கு என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்துக்காக சென்று கொண்டு இருக்கிறேன். கர்நாடகா முதல்–மந்திரி சித்தராமையா, காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தொடர்வது இரு மாநிலங்களும் தீங்கை விளைவிக்கும்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமான முடிவுகள் வரும். பொறுத்திருந்து பார்ப்போம். யஷ்வந்த் சின்கா விவகாரம் புதிது அல்ல. நீண்ட நாட்களாகவே சொல்லி கொண்டு இருந்ததுதான்.

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை சட்டம் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியான ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story