சச்சின் தெண்டுல்கருக்கு கேரளாவில் புதிய நூலகம் திறப்பு
கேரளாவில் பேராசிாியா் ஒருவா் சச்சின் டெண்டுல்காின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு அவா் பெயாில் புதிய நூலகம் ஒன்று திறந்துள்ளாா். #SachinTendulkar
கோழிக்கோடு,
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு நகரில் உள்ள மலபார் கிறிஸ்துவர் கல்லூரியில் பணியற்றி வரும் வரலாற்றுப் பேராசிரியர் ஒருவா் 'மாஸ்டர் பிளாஸ்டா் சச்சின் தெண்டுல்கர்' என்ற பெயாில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளார்.
மேலும் பேராசிரியா் வசிஷ்ட் மேனிகோத் நூலகத்தை பற்றி கூறுகையில்,
"இங்கே உள்ள அனைத்து புத்தகங்களும் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்ட சச்சின் தெண்டுல்கரை அடிப்படையாகக் கொண்டவை." என்றாா்.
இதையடுத்து அந்த நூலகத்தில் சச்சின் தெண்டுல்கரை அடிப்படையாக கொண்ட புத்தகங்கள் மட்டும் சுமாா் 60க்கும் மேற்பட்டவைகள் உள்ளன என தொிவித்தாா். இதில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி மற்றும் ஹிந்தி போன்ற 11 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 'கிரிக்கெட் கடவுள்' என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த நூலகத்தை திறந்தாகவும் விளக்கியுள்ளாா். இவ்வாறு அவா் கூறினாா்.
Related Tags :
Next Story