மாநில செய்திகள்

மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு + "||" + I endorse the efforts of Mamata to bring together various political parties to oppose BJP MK Stalin

மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு

மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு
மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து உள்ளார். #MKStalin #MamataBanerjee

சென்னை,

2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வியூகம் வகுப்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒரு அணியில் திரட்டுவதில் தீவிரமாக களமிறங்கி உள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசிவருகிறார். தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்தார். டெல்லியில் திமுக எம்.பி. கனிமொழியை சந்தித்து பேசினார். இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஏப்ரல் 10-ம் தேதி மம்தா பானர்ஜி சென்னைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியது. பின்னர் மம்தா பானர்ஜியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.இந்நிலையில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து உள்ளார். 

  “பிராந்திய கட்சிகளின் ஒற்றுமை மற்றும் வலுவான கூட்டாட்சி ஒத்துழைப்பிற்கு திமுக எப்போதும் துணை நிற்கும். பாரதீய ஜனதாவின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றாக இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை ஆதரிக்கிறேன்,” என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.