சமத்துவ மக்கள் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு


சமத்துவ மக்கள் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு
x
தினத்தந்தி 26 April 2018 1:21 AM IST (Updated: 26 April 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காததை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்பட்டது. #Sarathkumar

சென்னை,
 
சென்னையில் உள்ள செப்பாக்கத்தில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காததை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாா்.

மேலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழா் கட்சியின் ஒருகிணைப்பாளா் சீமான், விடுதலைக்கட்சியின் தலைவா் திருமாவளன் ஆகியோா் நோில் சென்று கலந்து கொண்டனா். பின்னா் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவா் திருநாவுகரசா் வாழ்த்தும் தொிவித்தாா் .

இந்நிலையில் தற்போது சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்தனா், இந்த  உண்ணாவிரத நிறைவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் பழரசம் கொடுத்து முடித்துவைத்தார். மேலும், காவிரி பிரச்சனைக்காக மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்தால், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தயார் என்றும் சரத்குமாா் கூறினாா்.

Next Story