அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக உள்ளோம்: அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக உள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #Sasikala
சென்னை:
அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதற்கு தீர்ப்பின் நகலை பார்த்த பிறகே கருத்து கூற முடியும். ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்டவர் என்று தினகரனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக
உள்ளோம். சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்
Related Tags :
Next Story