தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு
தூத்துக்குடி உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய விவகாரத்தில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீச்சுப்பட்டுள்ளது. #Sterlite
தூத்துக்குடி
தூத்துக்குடி உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல்வேறு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வந்தனா். பின்னா் இந்த போராட்டம் பல நாளாக நீடித்தது வந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் ஆா்ப்பாட்டங்கள் செய்தனா், பல்வேறு பிரபலங்களும் இதற்கு ஆதா்வு செய்தனா்.
மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக மக்கள் பேரணியாக திரண்டு சென்றும் போராட்டங்கள் நடத்தினா்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் ஸ்டொ்லைட் ஆலையின் வளாகத்தின் முன்பு அடையாளம் தொியாதவா்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இருசக்கர வாகனத்தில் வந்த அந்த மா்ம நபா்கள் யாா் என்று வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு தொடா்பாக பல்வேறு தரப்பில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Related Tags :
Next Story