விசாரணையை நீட்டிக்க ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்படும் விசாரணை அதிகாரி சந்தானம்


விசாரணையை நீட்டிக்க ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்படும் விசாரணை அதிகாரி சந்தானம்
x
தினத்தந்தி 26 April 2018 7:13 PM IST (Updated: 26 April 2018 7:13 PM IST)
t-max-icont-min-icon

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணையை நீட்டிக்க ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்படும் என விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்து உள்ளார். #NirmalaDevi


சென்னை,

கல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக செல்போனில் பேசியதாக அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேற்று சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டார். இந்த விசாரணை இரவு 9 மணி வரை நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், 

காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பல்கலைக்கழக விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், தொலை நிலைக் கல்வி இயக்குனர் விஜயதுரை ஆகியோரிடம் மட்டும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. வியாழக்கிழமை(இன்று) காலை மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியை சந்தித்து விசாரணை நடத்த இருக்கிறேன். இதுபோல், வெள்ளிக்கிழமை(நாளை) அருப்புக்கோட்டை சென்று விசாரணை நடத்த இருக்கிறேன். பல்கலைக்கழக பணியாளர் நன்னடத்தை விதியின் கீழ் துணைவேந்தர் எடுக்கும் நடவடிக்கை சரியானது தான் என்றார்.

இன்று நிர்மலா தேவியை சந்தித்து விசாரணை அதிகாரி சந்தானம் விசாரணையை மேற்கொண்டார். 6 மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடந்தது. இதனையடுத்து விசாரணை அதிகாரி பேசுகையில், நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணையை நீட்டிக்க ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்படும் என்றார். நிர்மலா தேவியிடம் விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. மேலும் விசாரணை நடத்தப்படாது. சிபிசிஐடி விசாரணைக்கு பின் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் நாளை விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார் சந்தானம். 

Next Story