10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு


10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 9:08 PM GMT)

அரக்கோணம் யார்டு பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை,

 சென்னை சென்டிரல்-மைசூரு இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12007/08), கோவை -சென்னை சென்டிரல் இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் (12674/75) மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் (12676), சென்னை சென்டிரல்-திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (16057/54), சென்னை சென்டிரல்- ஜோலார்பேட்டை இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089/90), மதுரை -சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (20602) உள்ளிட்ட 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன.

* அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல், செங்கல்பட்டு, காட்பாடி, வேலூர், கடப்பா, கடற்கரைக்கு செல்லும் பயணிகள் ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் (66036), நெல்லூர்-சூலூர்பேட்டை (66038), திருப்பதி-அரக்கோணம் (66050), சென்னை சென்டிரல்-அரக்கோணம் (66015), அரக்கோணம்-திருப்பதி (66039), ஆவடி-மூர்மார்க்கெட் (66002), திருப்பதி-நெல்லூர் (66033), மூர்மார்க்கெட்- ஆவடி (66005) இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

* மும்பை சி.எஸ்.எம்.டி.-சென்னை சென்டிரல் பயணிகள் ரெயில் (11027), காச்சிக்குடா-செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் (17652), சென்னை எழும்பூர்-தாதர் எக்ஸ்பிரஸ் (12164), சில்கார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12508), டேராடூன்-மதுரை எக்ஸ்பிரஸ் (12688), தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (13351), பாட்னா -எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22644) உள்ளிட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு திருத்தணி நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்.

* சென்னை சென்டிரல்-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் (12243/44), சென்னை சென்டிரல்-பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் (12639/40) ஆகியவை 90 நிமிடங்களும், சென்னை சென்டிரல்-பெங்களூரு டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ் (22626) 95 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும்.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

Next Story