மாநில செய்திகள்

‘தனது சுயநலத்துக்காக சசிகலாவை தவறாக வழிநடத்துகிறார் தினகரன்’ திவாகரன் கடும் தாக்கு + "||" + For his selfishness Misleading Sasikala Dinakara, Diwakaran is a heavy attack

‘தனது சுயநலத்துக்காக சசிகலாவை தவறாக வழிநடத்துகிறார் தினகரன்’ திவாகரன் கடும் தாக்கு

‘தனது சுயநலத்துக்காக சசிகலாவை தவறாக வழிநடத்துகிறார் தினகரன்’ திவாகரன் கடும் தாக்கு
ஹலோ எப்.எம். 106.4-ல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், சசிகலாவின் தம்பியும், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்தவருமான திவாகரன் கலந்துகொண்டு, தொகுப்பாளர் ராஜசேகருடன் உரையாடுகிறார்.
சென்னை,

அப்போது, தங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருந்து வருகிறோம். ஆனால், தினகரன் மட்டும் யாருடனும் சேர்வதில்லை. சொந்த சகோதரனுடனேயே மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தினகரனுக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் கிடையாது. ஆனால் தினகரன், சசிகலாவிடம் தனக்குத்தான் செல்வாக்கு இருப்பதுபோல் காட்டிக்கொள்ள முனைகிறார். பெங்களூரு சிறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்ததும், சசிகலா சொன்னதாக பொய்களை பரப்பி வருகிறார். வெளியில் நடக்கும் உண்மை நிலவரத்தை சொல்லாமல் மறைத்து தனது சுயநலத்துக்காக சசிகலாவை, தினகரன் தவறாக வழி நடத்துகிறார் என்றும் சசிகலாவிடம் உண்மை நிலையை கூறவிடாமல் எங்களை தடுத்துவருகிறார் என்றும் திவாகரன் குற்றம் சாட்டி உள்ளார்.


எடப்பாடி ஆட்சி குறித்து பேசுகையில், பல குறைகள் இருந்தாலும், காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் தன்னால் முடிந்த அளவு செயல்படுகிறார். கட்சியிலும், ஆட்சியிலும் பா.ஜனதாவின் ஆதிக்கம் இருப்பது உண்மைதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தொகுப்பாளரின் பல்வேறு கேள்விகளுக்கு திவாகரன் சூடாகவும், சுவையாகவும் பதில் அளித்துள்ளார்.