அண்ணாசாலையை கடக்க உதவும் சுரங்கப்பாதைகள் மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைப்பு


அண்ணாசாலையை கடக்க உதவும் சுரங்கப்பாதைகள் மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைப்பு
x
தினத்தந்தி 9 May 2018 4:30 AM IST (Updated: 9 May 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாசாலையில் சாலையை கடக்க உதவும் சுரங்கப்பாதைகளை அருகில் உள்ள 3 மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை,

சென்னையில் நேரு பூங்கா- விமானநிலையம், விமானநிலையம்-சின்னமலை மற்றும் ஆலந்துர்- பரங்கிமலை இடையே சுமார் 40 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேரு பூங்கா- சென்டிரல் (வழி எழும்பூர்), சைதாப்பேட்டை- ஏ.ஜி- டி.எம்.எஸ் (தேனாம்பேட்டை) இடையே பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஒரு சில நாட்களில் இந்தப்பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகள் கவரும் வகையில் பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அண்ணாசாலையில் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஏ.ஜி-டி.எம்.எஸ்., தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் சுரங்கத்திற்குள் அமைந்துள்ளது.

அரசினர் தோட்டம் அருகில் உள்ள அண்ணாசிலை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மற்றும் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் பயணிகள் சாலைகளை கடப்பதற்காக நெடுஞ்சாலைத்துறையி னர் சுரங்கப்பாதைகளை அமைத்து உள்ளனர்.

இந்த சுரங்கப்பாதைகளை மேற்கண்ட மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சுரங்கப்பாதையில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு உள்ளே செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை அண்ணாசாலையில் சாலையை கடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளின் அருகில் அரசினர் தோட்டம், ஏ.ஜி- டி.எம்.எஸ். ஆகிய 3 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. சாலையை கடக்கும் பயணிகள் எளிதாக மெட்ரோ ரெயில் நிலையத்தை சென்றடைய ரெயில் நிலையத்தில் இருந்து சுரங்கப்பாதைக்கு தனி வழி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில மாதங்களில் இந்தப்பணிகள் நிறைவடையும்.

சென்னை, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையிடம் உள்ள கோயம்பேட்டில் தினசரி 5 ஆயிரம் யூனிட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் கோயம்பேடு முதல் விமானநிலையம் வரை உள்ள 13 உயர்த்தப்பட்ட பாதையில் உள்ள ரெயில் நிலையங்களிலும் படிப்படியாக சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 1 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சூரிய சக்தி மின்சார தகடுகள் பொருத்தப்பட உள்ளது. இதுதவிர கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் 125 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

சூரிய சக்தி மின்சாரம் மூலம் மெட்ரோ ரெயிலை இயக்குவது குறித்தும் பரி சீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 

Next Story