காலா போன்ற காளான்கள் காணாமல் போகும், எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
காலா போன்ற காளான்கள் காணாமல் போகும், எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Rajinikanth #Kaala #Jayakumar
சென்னை
ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 9-ஆம் தேதி) மாலை நடைபெற இருக்கிறது.
ஆனால், இன்று காலை 9 மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதன் பாடல்களை வெளியிட்டார். இந்த பாடல்கள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.
இந்நிலையில், இப்பாடல்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘காலா’ படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது. ‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்’. எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களில் மது, புகை பிடித்தது கிடையாது. கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள பாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
Related Tags :
Next Story