சென்னை ஏரிகள் புனரமைக்கும் பணி


சென்னை ஏரிகள் புனரமைக்கும் பணி
x
தினத்தந்தி 11 May 2018 9:06 PM GMT (Updated: 11 May 2018 9:06 PM GMT)

சென்னை ஏரிகள் புனரமைக்கும் பணி

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 206 குளம் மற்றும் ஏரிகள் உள்ளன. முதற்கட்டமாக ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் 32 குளங்கள் மற்றும் ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் 6 குளங்கள் மற்றும் ஏரிகளை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் மூலம் ரூ.25.29 கோடி மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரி மற்றும் நெசவாளர் நகர் ஏரி ஆகிய 2 ஏரிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற நிதி சேவை நிறுவனம் நிறுவனம் மூலம் 24 குளங்கள் மற்றும் ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேற்கண்ட தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story