நகரத்தார் சமூகத்தினர் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்-அமைச்சர் செல்லூர் ராஜூ


நகரத்தார் சமூகத்தினர் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்-அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 12 May 2018 7:41 AM GMT (Updated: 12 May 2018 7:41 AM GMT)

காரைக்குடி ஆச்சியை தான் பிடிக்க முடியும், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறிய கருத்து மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #SellurRaju

சென்னை

கடந்த 9-ம் தேதி ’காலா’ பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினிகாந்த், தென் இந்திய நதிகளை இணைப்பது தனது வாழ்நாள் கனவு என்று பேசினார்.

ரஜினியின் இந்த கருத்து தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், நதிகளை இணைப்பை பயன்படுத்தி காரைக்குடி ஆச்சியை தான் பிடிக்க முடியும், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று விமர்சனம் செய்தார்.

அமைச்சரின் இந்த கருத்து,  சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் அமைச்சரின் இந்த பேச்சுக்கு காரைக்குடி நகரத்தார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து காரைக்குடி நகரத்தார் சங்கம் சார்பில் கூறி இருப்பதாவது;-

ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று அமைச்சர் சொல்லியிருப்பது புண்படுத்துகிற பேச்சாகும்.

ஆச்சி என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல், அவர்களை யார் மேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ள நாராசமான வார்த்தைகளை கேட்கிற பொழுது எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி உள்ளனர்.

இந்த நிலையில் தனியார் டிவிக்கு பேட்டி அளித்த  அமைச்சர் செல்லூர் ராஜூ,

நகரத்தார் சமூகத்தினர் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்; தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது
யாரையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என கூறினார்.

Next Story