கிண்டியில் கல்லூரி மாணவியை ஷேர் ஆட்டோவில் கடத்தி வன்கொடுமை 2 பேர் கைது
கிண்டியில் கல்லூரி மாணவியை ஆட்டோவில் கடத்தி வன்கொடுமை செய்ய முயற்சி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை
சென்னை கிண்டியிலிருந்து அய்யப்பன்தாங்கல் செல்லவிருந்த ஆட்டோவில் ஏறிய மாணவியை ஆட்டோ ஓட்டுநரும், அவரது நண்பரும் சேர்ந்து கடத்தி வன்கொடுமை செய்ய முயற்சி செய்தனர். இதனை அந்த மாணவி தடுத்து உள்ளார். ஆட்டோ வேகம் குறையும் போது அதில் இருந்து குதித்து தப்பி உள்ளார்.
பின்னர் அவர் கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொசப்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தனன், கோவூரை சேர்ந்த பவீன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story