குட்கா வழக்கில் மேல்முறையீடு: அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின்


குட்கா வழக்கில் மேல்முறையீடு: அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 May 2018 1:25 PM IST (Updated: 12 May 2018 1:25 PM IST)
t-max-icont-min-icon

குட்கா வழக்கில் மேல்முறையீடு செய்த அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #GutkhaScam

சென்னை: 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதுடன், மிகமூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியை அந்த வழக்கில் ஆஜராக ஏற்பாடு செய்திருப்பது ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சி.பி.ஐ விசாரணையை காலம் தாழ்த்தவும் தடுக்கவும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சுகாதாரத்துறை அமைச்சரும்,டி.ஜி.பி.யும் தங்களது “முகமூடியாக” பினாமி முறையில் பயன்படுத்தி, இந்த வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றிருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள் எனக் கூறி உள்ளார்


Next Story