மெர்கன்டைல் வங்கியில் ரூ.6 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது


மெர்கன்டைல் வங்கியில் ரூ.6 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2018 5:19 PM IST (Updated: 12 May 2018 5:41 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் உள்ள மெர்கன்டைல் வங்கியில் ரூ.6 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #BankRobbery

மன்னார்குடி, 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளையொன்று அமைந்துள்ளது. இந்தக் கிளையில் கடந்த திங்களன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் துப்பாக்கிகளுடன் வங்கியில் நுழைந்துள்ளது. அவர்கள் உடனடியாக வங்கியின் மேலாளர் கோவிந்தராசு மற்றும் காசாளர் உள்ளிட்ட ஊழியர்களை வங்கியில் இருந்த அறை ஒன்றில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அடைத்துள்ளனர். பின்னர் வங்கியில் இருந்த ரூ.6 லட்சம் பணம்; மற்றும் அடமானம் வைக்கப்பட்டிருந்த மூன்று லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் மேலாளர் மற்றும் சில ஊழியர்களை தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வங்கி அமைந்துள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இந்த வங்கி கொள்ளை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார்(27), மீரான் மைதீன்(29), சுடலை மணி(26), மரியசெல்வம்(35) ஆகியோர் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஒரு போலி துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மண்டல ஐஜி வரதராஜூ தெரிவித்தார். 


Next Story