சென்னையில் தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளுடனான ஆய்வுக்கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது
சென்னையில் தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளுடனான ஆய்வுக்கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. #MKStalin
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அன்னையர் தினத்தினை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தனது தாயார் தயாளு அம்மாளிடம் இன்று வாழ்த்து பெற்றார்.
அதன்பின்னர் அவரது தலைமையிலான ஆய்வு கூட்டம் இன்று தொடங்கியது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேபோன்று இந்த ஆய்வுக்கூட்டத்தில் தி.மு.க. மகளிரணி பிரசார குழு மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story