மாநில செய்திகள்

சசிகலா இனி என் சகோதரி அல்ல அவர் முன்னாள் சகோதரி -திவாகரன் ஆவேசம் + "||" + Sasikala is not my sister anymore She is a former sister Dhivakaran obsession

சசிகலா இனி என் சகோதரி அல்ல அவர் முன்னாள் சகோதரி -திவாகரன் ஆவேசம்

சசிகலா இனி என் சகோதரி அல்ல அவர் முன்னாள் சகோதரி  -திவாகரன் ஆவேசம்
சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி என திவாகரன் கூறினார். #TTVDhinakaran #Dhivakaran #Sasikala

மன்னார்குடி

மன்னார்குடியில் வைத்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் நிருபர்ர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு மன நலம் சரியில்லை என்று என் மீது உள்ள ஆதங்கத்தில் தினகரன் கூறி உள்ளார். சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி.  சசிகலா நோட்டீஸ் தந்ததால் எங்கள் அரசியல் பயணம் நின்று விடாது. தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம்.

 சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல். ஓ.பன்னீர் செல்வம் ,  சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல். ஓ.பன்னீர் செல்வம் , சசிகலா விரோதத்திற்கு டிடிவி தினகரன் தான் காரணம். என் மூலமாக சசிகலாவை பழிவாங்க தினகரன் எண்ணுகிறார்.

 மூன்று முறை ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியவன் நான் . என்னை குடும்பத்தில் இருந்து நீக்கியதற்கு நன்றி இனி எங்களை மாபியா குடும்பம் என அழைக்கமாட்டர்கள்

யாரும் பிறக்கும்போது பதவியுடன் பிறப்பதில்லை. எனக்கு மனநிலை சரியில்லை என்று சொல்வது கையாலாகதத்தனம்; மனநிலை சரியில்லாத எனக்கு ஏன் நோட்டீஸ் கொடுத்தார்கள் என கூறினார்.