கலப்பட உணவு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை


கலப்பட உணவு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 May 2018 4:23 PM IST (Updated: 14 May 2018 4:23 PM IST)
t-max-icont-min-icon

சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் உணவில் கலப்படம் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். #Vijayabaskar

சென்னை 

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் சென்னையில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவா் கூறியதாவது,

“மனநலம் பாதிக்கப்பட்டவா்களை கண்டறிந்து, அவா்களுக்கு உரிய சிகிச்சைகள் அளித்து அவா்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவா்கள்” என்று உறுதியளித்தார்.பின்னா் மனநல மருத்துவமனைகளில் கூடுதலாக 10 பணியாளா்கள் நியமிக்கப்பட உள்ள தகவலையும் தெரிவித்தார்.

இந்நிலையில் உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அவா் கூறினார்.

Next Story