தமிழகத்தில் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
நாடு முழுவதும் நடைப்பெற்ற ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. #ICSE #ISC #ExamResults
சென்னை,
ஐ.சி.எஸ்.சி.இ. கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10-ஆம் வகுப்பு (ஐ.சி.எஸ்.சி ) மற்றும் 12-ஆம் வகுப்பு ( ஐ.எஸ்.சி) தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ளது.
நாடு முழுவதும் நடந்து முடிந்த இந்த பொதுத்தோ்வின் முடிவுகளில் தமிழகத்தில் 77 ஐசிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 99.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 43 ஐ.எஸ்.சி., பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 99.30% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவா்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story