இன்று நடைபெறுவதாக இருந்த நியாய விலைக்கடை பணியாளர்கள் போராட்டம் 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


இன்று நடைபெறுவதாக இருந்த நியாய விலைக்கடை பணியாளர்கள் போராட்டம் 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 15 May 2018 2:17 AM IST (Updated: 15 May 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடைப் பணியாளர் சங்கம் 15-5-2018 அன்று (இன்று) அறிவித்திருந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடைப் பணியாளர் சங்கம் 15-5-2018 அன்று (இன்று) அறிவித்திருந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி.என்.சி.எஸ்.சி.க்கு இணையான ஊதியம், தனித்துறை, 4,500 பணியாளர்களின் பணி வரன்முறை, பொட்டலங்களாக பொருள்களை வழங்குதல் உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தோம். அது தொடர்பாக, கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து 14-5-2018 அன்று (நேற்று) பேச்சு வார்த்தை நடத்தினார்.

பேச்சு வார்த்தையில் டி.என்.சி.எஸ்.சி.க்கு இணையான ஊதியம், தனித்துறை, பணிவரன் முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் மீதமுள்ள கோரிக்கைகளை நிர்வாகமே நடைமுறைப்படுத்தும் எனவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. எனவே, அரசு பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 6-6-2018 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story