பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு 2 நாள் போலீஸ் காவல் நெல்லை கோர்ட்டு அனுமதி


பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு 2 நாள் போலீஸ் காவல் நெல்லை கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 15 May 2018 2:38 AM IST (Updated: 15 May 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு 2 நாள் போலீஸ் காவல் நெல்லை கோர்ட்டு அனுமதி

நெல்லை, 

நெல்லையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் (வயது 35) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். நிலத்தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் நிர்வாகி ராக்கெட் ராஜாவை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் கடந்த 6-ந் தேதி ராக்கெட் ராஜாவை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். பேராசிரியர் கொலை வழக்கு தொடர்பாக நேற்று காலை கோவை சிறையில் இருந்து ராக்கெட் ராஜாவை போலீசார் அழைத்து வந்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது கொலை வழக்கு தொடர்பாக ராக்கெட் ராஜாவை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் நீதிபதி சந்திரா, 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். முன்னதாக கோர்ட்டு வளாகத்தில் ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story