தேசிய செய்திகள்

பா.ஜனதா ‘பார்முலாவை’ கையிலெடுத்த காங்கிரஸ்! ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க ஆதரவு கவர்னருக்கு கடிதம் அனுப்பியது + "||" + Kumaraswamy Set to be Kingmaker as Karnataka Heads for Hung Assembly

பா.ஜனதா ‘பார்முலாவை’ கையிலெடுத்த காங்கிரஸ்! ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க ஆதரவு கவர்னருக்கு கடிதம் அனுப்பியது

பா.ஜனதா ‘பார்முலாவை’ கையிலெடுத்த காங்கிரஸ்! ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க ஆதரவு கவர்னருக்கு கடிதம் அனுப்பியது
கர்நாடகாவில் இரண்டாவது இடம்பிடித்த காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சியை அமைக்க முக்கிய முடிவை விரைவாக எடுத்து உள்ளது. #KarnatakaElections2018 #Congress #BJP
பெங்களூரு,

224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் முன்னிலை பெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை 112-ஐ எட்டவில்லை. இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கைகோர்த்தால் ஆட்சி அமைக்கும் பலமான 112-ஐ தாண்டிவிடலாம். கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பா.ஜனதா பின்பற்றிய பார்முலாவையே இப்போது காங்கிரஸ் கையில் எடுக்கிறது.

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சியை அமைத்துவிட காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர்கள் இடையே உச்சக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மதசார்பற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் காங்கிரஸ், முதல்-மந்திரி பதவியையே விட்டுக்கொடுக்க முன்வந்து உள்ளது. பா.ஜனதாவினர் வெற்றியை கொண்டாடிவரும் நிலையில் காங்கிரஸ் புதிய திட்டத்தை முன்னெடுத்து உள்ளது அரசியல் அரங்கில் பெரும் வியூகத்தை மீண்டும் எழுப்பி உள்ளது.

கர்நாடக மாநில தேர்தல் முடிவுகளுக்கு இடையே சித்தராமையாவின் அலுவலகம் மூடப்பட்டது. அவர் மாலை 4 மணிக்கு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பேசுகையில், “மதசார்பற்ற அரசை கர்நாடகாவில் அமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். முதல்-மந்திரி பதவி தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளமே முடிவு எடுக்கும்,” என்றார். காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில் காங்கிரஸ் தலைவர்கள், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினருடன் இணைந்து கவர்னரை சந்தித்து பேசுவார்கள், ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என தெரிவித்து உள்ளார். எங்களுடைய உறுப்பினர் எண்ணிக்கையுடன் அவர்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை கூட்டினால் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவை விட கூடுதல் இடம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். 

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கையை விடுப்போம் என காங்கிரஸ் கூறிஉள்ளது.

குலாம்நபி ஆசாத் மேலும் பேசுகையில், “நாங்கள் தேவேகவுடா மற்றும் குமாரசாமியிடம் தொலைபேசியில் பேசினோம். எங்களுடைய கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இருவரும் இணைந்து ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் காங்கிரஸ் நடவடிக்கையை முன்னெடுக்கிறது என வெளிப்படையாக தெரியவந்து உள்ளது. ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க ஆதரவு கவர்னருக்கு காங்கிரஸ் கடிதமும் அனுப்பி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

மாநிலத்தில் அதிகமான இடங்களை பிடிக்கும் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். கர்நாடகாவை பொறுத்தவரையில் பா.ஜனதாவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், அதிக இடம்பிடித்து உள்ளது. எனவே எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்கலாம். ஆனால் அவருடைய அரசு இரண்டு வாரங்களில் தன்னுடைய மெஜாரிட்டியை சட்டசபையில் காட்ட வேண்டும். 
 
கோவா மற்றும் மணிப்பூரில் நடந்தது என்ன?

40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபைக்கு 2017 தொடக்கத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 13 இடங்களும் கிடைத்தன. இதுதவிர, மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகள் தலா 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளனர். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வென்றது. 

இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 21 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் மேலும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலை உருவானது. இதற்கிடையே, தற்போது ராணுவ மந்திரியாக இருக்கும் மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா அரசியலுக்கு திரும்பி முதல்-மந்திரி பதவியை ஏற்க வேண்டும் என அந்த மாநில பாரதீய ஜனதா கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற பாரதீய ஜனதா ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், மனோகர் பாரிக்கர் கோவா அரசியலுக்கு திரும்பி முதல்-மந்திரியாக பதவி ஏற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மனோகர் பாரிக்கர் பனாஜி நகரில் கோவா கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து, தனக்கு 22 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். கோவா பார்வர்டு கட்சி, மராட்டியவாடி கோமந்த கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த தலா 3 எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஆகியோர் தன்னை ஆதரிப்பதாக கூறி அவர்களுடைய ஆதரவு கடிதத்தையும் அப்போது கவர்னரிடம் மனோகர் பாரிக்கர் வழங்கினார். இதனையடுத்து பா.ஜனதா ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் இதனை விமர்சனம் செய்தது.

மணிப்பூர்

மணிப்பூர் மாநில சட்டசபையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 60. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 31 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 28 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 21 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க மேலும் 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு மேலும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில், 4 உறுப்பினர்களை கொண்ட தேசிய மக்கள் கட்சி, ஒரு உறுப்பினரை கொண்ட லோக் ஜனசக்தி ஆகியவை பாரதீய ஜனதாவை ஆதரிக்க முன்வந்தது. 

மேலும் 4 உறுப்பினர்களை கொண்ட நாகா மக்கள் முன்னணி மற்றும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களை பாரதீய ஜனதா வகுத்தது. பிற கட்சிகளை தன்வரிசையில் இழுத்த பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமையை கோரியது.  அதன்படி அங்கும் பாரதீய ஜனதாவே ஆட்சியில் அமர்ந்தது. 

எனவே இதுபோன்று கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

 இதற்கிடையே பாரதீய ஜனதா தலைவர் பிஎஸ் எடியூரப்பாவும் கவர்னரை சந்திக்க நேரம் கோரி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பசுக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பாஜக வழங்கவில்லை, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் - மஹ்பூபா
பசுக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பாஜக வழங்கவில்லை, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் என காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி மஹ்பூபா முஃப்தி கூறி உள்ளார்.
2. காங்கேயம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி சூதாட்ட கும்பலிடம் ரூ.20 லட்சம், 30 பவுன் நகை கொள்ளை
காங்கேயம் அருகே துப்பாக்கி சூடு நடத்தி சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ.20 லட்சம், 30 பவுன்நகை ஆகியவற்றை 2 காரில் வந்த 12 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. ரபேல் விவகாரம்: கார்கேவிற்கு எதிர்ப்பு; ஏஜி, சிஏஜிக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் விடுக்குமா?
ரபேல் விவகாரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவின் நோக்கத்திற்கு மெஜாரிட்டி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஏஜி, சிஏஜிக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் விடுக்காமல் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
5. ரபேல் விவகாரம்: ‘மோடிக்கு எதிராக காங்கிரஸ் சதிதிட்டம்’ 70 இடங்களில் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறது பா.ஜனதா
ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் புகார், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.