எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
தமிழ்த்துறையில் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார், இவர் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #Balakumaran #EdappadiPalanisamy
சென்னை
பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு முக்கிய பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனா்.
100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகள் எழுதியுள்ளார். நாயகன், குணா, ஜெண்டில் மேன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கலைமாமணி விருது மற்றும் இலக்கிய சிந்தனை விருது போன்ற எண்ணற்ற விருதுகளை பெற்றவா்.
முதலமைச்சா் தன்னுடைய இரங்கலை தெரிவிக்கையில்,
“பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கியத்துறைக்கு ஒரு பேரிழப்பு” என்றும் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர் பண்பு கொண்டவா் என்றும் தெரிவித்துள்ளார். பின்னா் இலக்கிய துறையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவா் என இரங்கல் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story