காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை-ஜெயக்குமார்


காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை-ஜெயக்குமார்
x
தினத்தந்தி 21 May 2018 1:28 PM IST (Updated: 21 May 2018 1:28 PM IST)
t-max-icont-min-icon

காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே அதிகாரம் உள்ளது. மு.க ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார். அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துகொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை தினமும் நடத்திவருகிறார். காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை 

ஆட்சியிலும், கட்சியிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். கட்சி, அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா.

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் மாநில வருவாய் பாதிக்கப்படும் .ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story