ஸ்டெர்லைட் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 6 ஆக உயர்வு
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. #SterliteProtest
சென்னை
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டகாரர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதால் பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து சூறையாடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன்(55), தாமோதர் நகர் பகுதியில் வசிக்கும் மணிராஜ், குறுக்குசாலையை சேர்ந்த தமிழரசன்(28), ஆசிரியர் காலணியை சேர்ந்த சண்முகம்(40), மேட்டுப்பட்டியை சேர்ந்த கிளாஸ்டன்(40), தூத்துக்குடியை சேர்ந்த கந்தையா(55) என்றும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போராட்டக்காரர்கள் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் 6 மாடி குடியிருப்புக்கு தீவைத்தனர். இதனால் அந்த குடியிருப்பு தீப்பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. கலெக்டர் அலுவலகத்தின் வெளியேயும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை தொடர்வதால் தூத்துக்குடியில் பரபரப்பும், பதற்றமும் நீடிக்கிறது.
Related Tags :
Next Story