நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க உத்தரவு


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2018 7:25 PM IST (Updated: 23 May 2018 7:25 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. #SterliteProtest


சென்னை,


தூத்துக்குடியில் போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவலை தடுக்கும் வகையில் இணைய சேவையை முடக்க தமிழக உள்துறை உத்தரவிட்டு உள்ளது. 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களில் இன்று முதல் 27-ம் தேதி வரையில் இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இணைய சேவை முடக்கம் காரணமாக வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் செயல்படாது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழக அரசு இணைய சேவை முடக்கத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.

Next Story