ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: பன்வாரிலால் புரோஹித் உடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். #Thoothukkudi #SterliteProtest
சென்னை,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் நேற்று நடைபெற்ற கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். தூத்துக்குடியில் இன்று 2–வது நாளாக கலவரம் நீடித்தது. அண்ணாநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சுமார் 30 நிமிடங்கள் பேசி வருகிறார்கள். ஆலோசனையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story