தமிழக அரசின் கண்காணிப்பு அலுவலர் தூத்துக்குடியில் ஆய்வு


தமிழக அரசின் கண்காணிப்பு அலுவலர் தூத்துக்குடியில் ஆய்வு
x
தினத்தந்தி 24 May 2018 1:53 AM IST (Updated: 24 May 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் கண்காணிப்பு அலுவலர் தூத்துக்குடியில் ஆய்வு

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் நடந்த அசம்பாவித சம்பவங்களை கண்காணிக்கவும், மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார், வேளாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோரை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து துரித நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து 2 அதிகாரிகளும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. விஜயகுமார், தென்மண்டல காவல் துறை தலைவர் சைலேஸ் யாதவ், மாவட்ட கலெக்டர் என்.வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் எஸ்.பி., பெ.மகேந்திரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, அறிவுரைகளை வழங்கினர்.

தொடர்ந்து காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை ககன்தீப்சிங் பேடி சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, தென்மண்டல டி.ஐ.ஜி. பிரதீப் யாதவ், விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மு.ராஜராஜன், மருத்துவக்கல்லூரி முதல்வர் லலிதா, அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலேஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவ பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும் உத்தரவிட்டார்.

Next Story