ஸ்டெர்லைட்’ ஆலையை மூட வலியுறுத்தி பிரதமருக்கு, விஜயகாந்த் கடிதம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதும், அதில் 12 பேர் பலியானதும், பலர் படுகாயம் அடைந்ததும் நெஞ்சை பதற செய்துள்ளது.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதும், அதில் 12 பேர் பலியானதும், பலர் படுகாயம் அடைந்ததும் நெஞ்சை பதற செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இப்படி ஒரு அராஜக போக்கை போலீசார் நடத்தியிருப்பதை கடுமையான கண்டிக்கிறோம். மத்திய-மாநில அரசுகளுக்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். போராட்டத்தில் படுகாயம் அடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளித்து மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் ஆதரவு இன்றி எந்தவொரு திட்டத்தையும் அமல்படுத்த அரசாங்கத்தால் முடியாது. எனவே இனியாவது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. எனவே இனியும் இந்த அ.தி.மு.க. அரசு ஆட்சியில் தொடராத வகையில் கலைக்கப்பட வேண்டும். அதற்கான முக்கிய முடிவுகளை தமிழக கவர்னர் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story