பிளஸ்-2 தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தாய் தற்கொலை
பிளஸ்-2 தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தாய் தற்கொலை
தாம்பரம்,
பிளஸ்-2 தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மனம் உடைந்த தாய், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கனிமொழி(வயது 45). இவர், பொன்னேரி நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தார்.
இவர்களுடைய மகன், பம்மலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் இவர்களது மகன், குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக தெரிகிறது.
இதனால் கனிமொழி மனம் உடைந்தார். மகன் குறைந்த மதிப்பெண்கள் வாங்கி விட்டானே, சரியாக படிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்து வந்தார்.
இதனால் மனம் உடைந்த கனிமொழி, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கர்நகர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story