நீட் தேர்வுக்கான விடைத்தாள் வெளியீடு


நீட் தேர்வுக்கான விடைத்தாள் வெளியீடு
x
தினத்தந்தி 25 May 2018 7:52 AM IST (Updated: 25 May 2018 7:54 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கான விடைத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. #NeetExam

சென்னை,

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்தியது.

தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டை தவிர வெளி மாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்தனர். தெரியாத மாநிலத்தில் முகவரியை தேடி கண்டுபிடித்து தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. தன்னுடைய இணையதளத்தில் தேர்வு மையத்தை எக்காரணத்தை கொண்டும் மாற்ற இயலாது என்றும், தேர்வு மையத்தை தேர்வு செய்வது கணினி முறை என்றும் தெரிவித்து இருந்தது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வுகள் கடந்த மே 6-ந் தேதி நடந்து முடிந்தது.

இந்நிலையில் மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைத்தாள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதனை இன்று முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் நீட் விடைத்தாளை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story