கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு, தூத்துக்குடியில் பேருந்துகள் பணிமனைகளுக்கு திரும்ப அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததை அடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. இன்று மெல்ல இயல்புநிலை திரும்பிய நிலையில் அரசு பேருந்துக்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. மாலை ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் அரசுப்பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா கருங்குளத்திற்கு விரைந்தார். கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து அரசுப் பேருந்துகள் பணிமனைகளுக்கு திரும்ப அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் இயங்கும் அரசுப்பேருந்துகள் அந்தந்த பணிமனைகளுக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
Related Tags :
Next Story