தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்


தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர்  தகவல்
x
தினத்தந்தி 26 May 2018 5:56 AM GMT (Updated: 26 May 2018 5:56 AM GMT)

தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். #SterliteProtest

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  மூடக்கோரி  நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது இதில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தால் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டு  உள்ளது நாளை இந்த தடை உத்தரவு இருக்கும்.  3 நாட்களுக்கு பிறகு  தூத்துக்குடி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி நகர் பகுதியில் வழக்கம் போல் டீக்கடைகள், உணவகங்கள், பழக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் நகர, புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தூத்துக்குடியிலிருந்து பேருந்துகளின்  இயக்கம் தொடங்கின. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் பேருந்து சேவை இயக்கம். அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். தூத்துக்குடியில் 100% கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 90% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினரின் எண்ணிக்கையை குறைக்காமல் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது என கூறினார்.

Next Story