ஸ்டெர்லைட் பற்றி ஆண்டு முழுவதும் விவாதிக்க அதிமுக தயார்; ஸ்டாலின் தயாரா? ஜெயக்குமார் கேள்வி


ஸ்டெர்லைட் பற்றி ஆண்டு முழுவதும் விவாதிக்க அதிமுக தயார்; ஸ்டாலின் தயாரா? ஜெயக்குமார் கேள்வி
x
தினத்தந்தி 1 Jun 2018 5:28 AM GMT (Updated: 2018-06-01T10:58:37+05:30)

ஸ்டெர்லைட் பற்றி ஒருநாள் அல்ல ஆண்டு முழுவதும் விவாதிக்க அதிமுக தயார்; ஸ்டாலின் தயாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். #AIADMK #Jayakumar

சென்னை

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் பற்றி ஒருநாள் அல்ல ஆண்டு முழுவதும் விவாதிக்க அதிமுக தயார்; ஸ்டாலின் தயாரா?. சட்டப்பேரவைக்கு வந்து திமுக பேசட்டும்; அவர்களது துரோகத்தை நாங்கள் கூறுகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான்; அரசாணை எங்கே போனாலும் செல்லும். ஐ.நா சபைக்கே சென்றாலும், ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்க முடியாது  எனக் கூறினார்


Next Story