தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு


தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு
x
தினத்தந்தி 2 Jun 2018 12:08 PM GMT (Updated: 2018-06-02T17:38:01+05:30)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை இன்று நிறைவு அடைந்தது. #ThoothukudiIncident |

தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் குழு விசாரணை நடத்த தூத்துக்குடிக்கு சென்றது.

ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த சித்தரஞ்கன் மோகன்தாஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி சென்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய குழுவினா், துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் ஆய்வு நடத்தினா்.  பின்னா் வன்முறையில் பாதிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஊழியா்கள் குடியிருப்பையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரையும் சந்தித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.  விசாரணை நிறைவடைந்ததை அடுத்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் சென்னை திரும்புகின்றனர்.

Next Story