திமுக தலைவர் கருணாநிதிக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து


திமுக தலைவர் கருணாநிதிக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 2 Jun 2018 7:56 PM IST (Updated: 2 Jun 2018 7:56 PM IST)
t-max-icont-min-icon

திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா். #Karunanidhi #TamilisaiSoundararajan

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி நாளை தன்னுடைய 95வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறாா். வயது முதிா்ச்சி காரணமாக அரசியல் பயணத்தில் இருந்து சற்று ஓய்வு நிலையில் உள்ளாா். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் தங்களுடைய வாழ்த்துக்களை  தொிவித்து வருகின்றனா்.

இதைத்தொடா்ந்து தமிழக பாஜக மாநில தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்  தங்களுடைய தரப்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

மேலும், அவா் டுவிட்டாரில் கூறுகையில்,

“தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவா் கலைஞா் அவா்கள் பல்லாண்டு நீடூழி மற்றும் உடல் நலத்துடன் வாழ்ந்து மக்களுக்கு பணி செய்ய இறைவனை நான் வணங்குகிறேன்” என்று தன்னுடைய டுவிட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.

Next Story