“மக்களின் பிரதிநிதியாக தான் வந்துள்ளேன்” என்று குமாரசாமியுடன் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் பேட்டி


“மக்களின் பிரதிநிதியாக தான் வந்துள்ளேன்” என்று குமாரசாமியுடன் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2018 8:29 AM GMT (Updated: 4 Jun 2018 8:29 AM GMT)

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடன் சந்தித்த கமல்ஹாசன் “நான் மக்களின் பிரதிநிதியாக தான் சந்தித்தேன்” எனறு பேட்டியளித்துள்ளார். #Karnataka #Kamalhassan #Kumaraswamy

கா்நாடக,

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். 

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு புறப்பட்டார். சினிமா சம்பந்தமாக பேசுவதற்கு கர்நாடகா செல்லவில்லை என்றும் காவிரி தொடர்பாக பேசப் போவதாகவும் தனது சந்திப்பு பற்றி கூறியிருந்தார். இந்நிலையில் இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்துள்ளார் கமல். அவரை சந்தித்த பின்னா் சந்திப்பு குறித்து பேட்டி அளித்தார். மேலும், அவா் கூறியதாவது.

“நான் மக்களின் பிரதிநிதியாக தான் வந்துள்ளேன்” இந்த சந்திப்பில் காலா படம் பற்றி எதுவும் பேசவில்லை மற்றும் கூட்டணி குறித்தும் எதும் பேசவில்லை என்று விளக்கினார். இந்த சந்திப்பில் நல்ல நட்பின் தொடக்கமாக இருக்கும் என்று தான் முதல்வா் குமாரசாமியை சந்தித்ததாகவும் கூறினார்.

இந்நிலையில், “குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட சென்றேன்” என்பதையும், குமாரசாமியுடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல; மக்கள் நலனுக்கானது. இவ்வாறு அவா் பேசினார். 

Next Story