தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க. அரசு பெற்றுத் தந்து இருக்கிறது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

காவிரி நதிநீர் பிரச்சினையில், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையை அ.தி.மு.க. அரசு பெற்றுத்தந்திருக்கிறது என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், சட்டசபையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்டா மாவட்ட அமைச்சர்களான காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோர் பாராட்டு தெரிவித்து பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டதால் மேட்டூர் அணையில் இருந்து இம்மாதம் 12-ந்தேதி சாகுபடிக்காக தண்ணீர் திறந்தாக வேண்டும். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட திறமையான வாதத்தினால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதல் மேற்கொண்ட அயராத, உறுதியான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும், அவர்களது வழியில் செயல்படும் இந்த அரசின் சட்டப் போராட்டத்திற்கும், தமிழ்நாடு விவசாய பெருங்குடி மக்களுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.
சுப்ரீம் கோர்ட்டு, தனது 18-5-2018 தேதியிட்ட ஆணையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை, மத்திய அரசு, இந்த பருவமழை தொடர்வதற்கு முன் அமைக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்ட பணிகள் மற்றும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பெரும்பாலும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வரைவு திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது .
தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் டெல்லியிலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களூருவிலும் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் சாசன அமைப்பின்படி, அந்தந்த மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரை, அம்மாநிலங்களே பகிர்ந்துகொள்ள அதிகாரம் உள்ளது என்ற கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் கூற்றை, சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவினால், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சியினுடைய துணைத் தலைவர் (துரைமுருகன்) பல ஆண்டு காலம் அவையில் இருந்திருக்கின்றார். பல ஆண்டு காலம் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர். முழுக்க, முழுக்க அத்தனையுமே தெரியும். 1983-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. (இந்த இடத்தில் 1983-ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார்)
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளையும், உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டும். நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, எங்களுடைய அ.தி.மு.க.வை சேர்ந்த இரு அவைகளினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும், தினமும், அவை தொடங்கிய காலத்தில் இருந்து, முடிகின்ற காலம் வரை, கிட்டத்தட்ட 22 நாட்கள் தொடர்ந்து நம்முடைய தமிழக விவசாயிகளுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் குரல் கொடுத்து, அவையை ஒத்திவைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார்கள்.
ஆகவே, அ.தி.மு.க. அரசு எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தது என்பதை மாமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, சட்ட வல்லுநர்களுடன் திறமையாக வாதிட்டு நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை அ.தி.மு.க. அரசு பெற்றுத் தந்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகிறார். இறுதியில், தனது துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.

Related Tags :
Next Story