நீட்தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை: நடிகர் விஷால் வருத்தம்


நீட்தேர்வில் தோல்வி அடைந்த மாணவி  தற்கொலை: நடிகர் விஷால் வருத்தம்
x
தினத்தந்தி 5 Jun 2018 3:29 PM GMT (Updated: 5 Jun 2018 3:29 PM GMT)

நீட்தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு நடிகர் விஷால் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

‘‘நீட் தேர்வுக்கு எங்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்து வருகிறோம். போராடி உயிரை மாய்த்துக்கொண்டாள் அனிதா. தேர்வு எழுதியும் தோற்றதால் உயிரை தந்து இருக்கிறாள் பிரதீபா. இந்த செய்தி கேள்விபட்டதில் இருந்தே வேதனையாக இருக்கிறது.

நீட் எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் கைகொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நீட் நிரந்தரம் என்றால் நீட் எழுத மாணவர்களுக்கு போதுமான வசதிகளையும் சிறப்பு வகுப்புகளையும் மன தைரியத்தையும் கல்வித்துறை வழங்கிட வேண்டும். இது அரசின் கடமை. இல்லையென்றால் தமிழ் நாட்டில் ஒரு ஏழை மாணவர்கூட டாக்டர் படிப்பை நினைத்துப்பார்க்க முடியாது என்ற நிலை உருவாகி விடும்.’’ இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

Next Story