துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கடந்த மே மாதம் 22 மற்றும் 23-ந் தேதிகளில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில், 13 பேர் மரணமடைந்தனர்.
இதையடுத்து இறந்தவர்களின் உடலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் உள்பட 3 வக்கீல்கள் வழக்கு தொடர்ந்தனர். அதில், பிரேத பரிசோதனை செய்யும்போது, பொதுமக்கள் தரப்பில் ஒரு டாக்டரை நியமிக்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை பெறவேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதேபோல, துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் ஐகோர்ட்டு கோடை விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.பாஸ்கரன், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர், ‘அரசு டாக்டர்கள் 2 பேர், ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் அல்லது திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் ஒருவர் என்று 3 டாக்டர்களை கொண்டு ஒரு குழுவை அமைக்கவேண்டும். இந்த, துப்பாக்கிசூட்டில் இறந்தவர்களின் உடல் முழுவதையும் ஸ்கேன், எக்ஸ்ரே, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவேண்டும். அதன்பின்னர் பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று விரிவான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
ஆனால், இறந்த 13 பேரில், 6 பேரின் உறவினர்கள் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியதால், 7 உடல்களை மட்டும் பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீதமுள்ள 6 பேரின் உடலை பதப்படுத்தி வைக்கும்படி கூறியிருந்தனர்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள் சிலர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில், பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் குழுவில் தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன் ஆஜராகி, “பலியான 6 பேரின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தால், 6 பேரின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய தயாராக உள்ளோம்” என்றார். இதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.
தூத்துக்குடி நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அங்கு 13 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். எனவே, இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான, நேர்மையான, நடுநிலைமையான விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும்.
அந்த விசாரணைக்கு இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தான் பிரதானமானது. இத்தனை நாட்களாக பிரேத பரிசோதனை நடத்தவில்லை என்பதே வேதனைக்குரியது.
நாளாக, நாளாக உடலில் உள்ள ஆதாரங்கள் அழிந்துவிட வாய்ப்புள்ளது. இந்த சம்பவத்தில் இறந்துபோன நபர்களின் குடும்பத்தினரையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.
உறவினர்களை இழப்பதன் மூலம் உள்ள வலியை நானும் அனுபவித்து இருக்கிறேன். அவர்களின் உணர்வுகளுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும். பிரேத பரிசோதனை தொடர்பாக ஏற்கனவே இரு நீதிபதிகள் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளனர். அந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஒட்டுமொத்த அரசு டாக்டர்கள் மீதும் குறைகூறக்கூடாது.
எனவே இறந்த 6 பேரின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கவேண்டும். அதை ஏற்று ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுப்படி உடனடியாக 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒருவேளை உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு மறுத்தால், மாவட்ட நிர்வாகமே பிரேத பரிசோதனையை முடித்து உடலை ஒப்படைக்க வேண்டும். மற்ற கோரிக்கைகள் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story