எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா: 67 கைதிகள் விடுதலை


எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா: 67 கைதிகள் விடுதலை
x
தினத்தந்தி 6 Jun 2018 6:04 AM GMT (Updated: 6 Jun 2018 6:04 AM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் சிறையில் இருந்த 67 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். #MGRBirthdayCeremony

சென்னை,

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் அதற்கான விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

அந்த செய்திக்குறிப்பில், 25.02.2018 அன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உச்ச நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story