சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடலாடி சத்திய மூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை


சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடலாடி சத்திய மூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 6 Jun 2018 6:23 AM GMT (Updated: 2018-06-06T11:53:22+05:30)

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

சென்னை

1991-96-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் கடலாடி சத்தியமூர்த்தி. இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.83 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் அவரது மனைவி சந்திராவுக்கும் தொடர்பிருப்பதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தி விடுவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கீழ் நீதிமன்றம் விடுவித்த நிலையில் உயர்நீதிமன்றம் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story