மாணவர்களின் நலன் கருதியே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது-பொன். ராதாகிருஷ்ணன்


மாணவர்களின் நலன் கருதியே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது-பொன். ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 6 Jun 2018 6:59 AM GMT (Updated: 2018-06-06T12:29:21+05:30)

மாணவர்களின் நலன் கருதியே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

புதுடெல்லி

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக மாணவி மரணம் அடைந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது; இரண்டாண்டு முன்பே நீட்டுக்கு பயிற்சி அளித்திருக்கவேண்டும்.

தமிழகத்தில் சுயநல அரசியலுக்காக நீட் தேர்வை காரணம் காட்டி பொய்யான பிரச்சாரத்தை பரப்பிவருகின்றனர்.

எந்த துறையில் படித்தாலும் முன்னேற முடியும் என மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழை பிழைப்பாய் வைத்து பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்தவேண்டும்; தமிழை தாயாக நினைக்கவேண்டும்.

தமிழகம் மட்டுமல்ல குஜராத்திலும் நீட் தேர்வை வேண்டாம் என்கிறார்கள்; தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு திணிப்பது போல் சொல்வது  தவறு

மாணவர்களின் நலன் கருதியே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. என கூறினார்.

Next Story