அரசியல் வசனங்கள், நில உரிமை பேசும் படம் காலா: ரசிகர்கள் உற்சாகம்; தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு


அரசியல் வசனங்கள், நில உரிமை பேசும் படம் காலா:  ரசிகர்கள் உற்சாகம்; தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 Jun 2018 4:20 AM GMT (Updated: 7 Jun 2018 4:20 AM GMT)

அரசியல் வசனங்கள், நில உரிமை பற்றி பேசும் படம் காலா என ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். படம் வெளியான தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் காலா என்ற கரிகாலன் படம் உலகம் முழுவதிலும் இன்று வெளியாகிறது.  இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் சமுத்திரக்கனி, நானா படேகர், சாயாஜி ஷிண்டே, சம்பத் மற்றும் நடிகைகள் ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் 600 தியேட்டர்களில் காலா படம் வெளியாகி உள்ளது.  இந்த படத்தில் அரசியல் பற்றிய வசனங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.  நில உரிமையை பற்றி பேசும் படம் ஆக காலா உள்ளது.  இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது என அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்க போலீசார் தியேட்டர்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மும்பையில் பல திரையரங்குகளில் காலா படம் வெளியாகி உள்ளது.  அங்கும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கர்நாடகாவில் காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை போலீசார் திருப்பி அனுப்பினர்.

Next Story