மாநில செய்திகள்

தூத்துக்குடியில்துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட 2 அதிகாரிகள் பணிஇடமாற்றம் + "||" + Ordered to shoot 2 officers transferred

தூத்துக்குடியில்துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட 2 அதிகாரிகள் பணிஇடமாற்றம்

தூத்துக்குடியில்துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட 2 அதிகாரிகள் பணிஇடமாற்றம்
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் 2 அதிகாரிகள் உள்பட 8 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டுக்கு, தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலர் சந்திரன் மற்றும் துணை தாசில்தார்கள் சேகர், கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கோட்ட கலால் அலுவலர் சந்திரன், தூத்துக்குடி நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் துணை தாசில்தார்களான சேகர், கண்ணன் ஆகியோரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதாவது நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தாராக (தேர்தல்) பணியாற்றி வந்த சேகர் ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தாராகவும், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வந்த கண்ணன் கயத்தாறு மண்டல துணை தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் உள்பட 8 அதிகாரிகளின் இடமாற்றத்திக்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று பிறப்பித்துள்ளார்.